அமைச்சர் ரகுபதி இயக்கி வைத்தார் துவார் ஊராட்சியில் ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழா

 

கந்தர்வகோட்டை, மே 22: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஓன்றியத்தில் துவார் ஊராட்சியில் ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழா சிறபாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் திருப்பதி தலைமை வகித்தார்.பள்ளி மேலாண்மை குழு தலைவி தவமணி, துவார் அரசு உயர்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வானவில் மன்ற கருத்தாளர் தெய்வீக செல்வி ஆயிரமாயிரம் அறிவியல் நிகழ்ச்சியில் காகிதம் படிப்புகளை எளிய அறிவியல் பரிசோதனைகளை செய்து காண்பித்து மாணவர்களை உற்சாகப்படுத்தினார். இல்லம் தேடி கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் ரேகா, அருங்குளம்மன், தனலெட்சுமி, பிரேமா, நளினி, உஷா, சிவகாமி, சத்தியா, அபிராமி சுந்தரி, மாதவி, முத்து ஜெயா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

கோடைகால இலவச குத்துசண்டை பயிற்சி முகாம்

துறையூர் அருகே ஆட்டுக்கு தழை பறித்த பெண் கிணற்றுக்குள் விழுந்து உயிரிழப்பு

திருச்சி மாவட்டத்தில் மாஜி படைவீரர்கள் குழந்தைகளுக்கு சார்ந்தோர் சான்று பெற அழைப்பு