கல்லூரி முன்னாள் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

ராஜபாளையம், மார்ச் 29: ராஜபாளையம் மஞ்சம்மாள் தொழில்நுட்பக் கல்லூரியை நிறுவிய நிறுவனர் என்.ஏ.ராமச்சந்திர ராஜா 100வது பிறந்த நாளை முன்னிட்டு கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் வாக்குப்பதிவு மற்றும் இயற்கை பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி சென்றனர். பேரணியை, ராஜபாளையம் வட்டாட்சியர் மற்றும் தேர்தல் அதிகாரி பாண்டியன் ஆகியோர் தலைமை வகித்து தொடங்கி வைத்தனர். பேரணியில் கல்லூரித் தாளாளர் கிருஷ்ணமூர்த்தி ராஜா முன்னிலை வகித்தனர். கல்லூரி இயக்குநர் விஸ்வநாதன், முதல்வர் பிச்சையாபிள்ளை ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

இந்தப் பேரணி சொக்கர் கோயிலிலிருந்து புறப்பட்டு பஞ்சு மார்க்கெட் நேருசிலை வரை சென்றது. பேரணியில் மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்பன போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். தொடர்ந்து, என்.ஏ.மஞ்சம்மாள் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. பேரணியில் முன்னாள் மாணவர்கள், விரிவுரையாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Related posts

பெரியகருப்பூர் சாமுண்டீஸ்வரி கோயில் காப்பு கட்டு விழா

முதல்வரின் 3 ஆண்டுகால ஆட்சியில் முத்தான திட்டங்கள்; காலை உணவு திட்டம் பேருதவியாக உள்ளது: குழந்தைகளின் பெற்றோர் பெருமிதம்

அதிக லாபம் ஆசை காட்டி பெண்ணிடம் ₹6.56 லட்சம் மோசடி