கலைஞர் பிறந்தநாளையொட்டி நெடுஞ்சாலைத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

 

உடுமலை, ஜூன் 9: முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி, நெடுஞ்சாலைத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் 5 லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, உடுமலை உட்கோட்டம் சார்பில் பொள்ளாச்சி- தாராபுரம்- கரூர் சாலையில் வேலப்பநாயக்கன்புதூரில் முதல்கட்டமாக 250 மரக்கன்றுகளை நடும் பணி நடந்தது.

கோட்ட பொறியாளர் ராணி தலைமை வகித்து மரக்கன்றுகளை நடும் பணியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் குடிமங்கலம் ஒன்றிய குழு துணைத்லைவர் புஷ்பராஜ், குடிமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் உமாதேவி, வடுகபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக உதவி பொறியாளர் லோகேஸ்வரன் வரவேற்றார். நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

தாந்தோணிமலை கடைவீதியில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும்

ராயனூர் அருகே பாசன வாய்க்காலில் கழிவு அகற்ற வேண்டும்

குக்கிராமங்களில் கூட பைப் லைன் அமையுங்கள்: குடிநீர் விநியோகம் கண்காணிக்க தனிக்குழு