எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு

செய்முறைமுதலில் கத்தரிக்காயின் காம்பை வெட்டி எடுத்து, அதனை நான்காக கீறி, தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும். பிறகு வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் கசகசா,  சோம்பு சேர்த்து வறுத்து பின்னர் இவை அனைத்தும் நன்றாக வறுபட்டதும் இதனுடன் துருவி வைத்துள்ள தேங்காயை சேர்த்து லேசாக வறுத்து விட்டு, அடுப்பை அனைத்துவிட வேண்டும். பிறகு இவற்றை நன்றாக ஆற வைத்து மிக்ஸியில் சேர்த்து அரைத்து கொள்ளவேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் அதில் கத்தரிக்காயை சேர்த்து, வதக்கி தனியாக வைக்க வேண்டும். அதே வாணலியில் ஒரு ஸ்பூன் சோம்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, நறுக்கி வைத்துள்ள வெங்காயம், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி, தக்காளியையும் சேர்த்து நன்கு வதங்கியதும், தனியாத்தூள், மிளகாய்த்தூள் சேர்க்கவும். எலுமிச்சை அளவு புளியை தண்ணீர் சேர்த்து கரைத்து, புளித் தண்ணீர் ஊற்றி பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைக்கவும். கடைசியாக கத்தரிக்காய் மற்றும் கொத்தமல்லித் தழை சேர்த்து 5 நிமிடம் சிறுதீயில் வைத்திருந்து இறக்கவும்….

Related posts

இளநீர் நன்னாரி ஜூஸ்

கடாய் பனீர்

வெண்டைக்காய் பருப்பு சாதம்