உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு எனது குப்பை எனது பொறுப்பு உறுதிமொழி ஏற்பு

 

திருவாரூர், ஜூன் 7: உலக சுற்றுசூழல் தினத்தைமுன்னிட்டு, திருவாரூர் நகராட்சி அலுவலகத்தில் எனது குப்பை எனது பொறுப்பு உறுதிமொழியை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ எடுத்துக்கொண்டார். அதில் குப்பையில்லா நகரங்களை உருவாக்குவோம், எனது குப்பை எனது பொறுப்பு, சுற்றுபுற தூய்மையே சுகாதாரத்தின் மேன்மை, நெகிழி பைகளின் பயன்பாட்டை தடுக்கும் விதமாக மஞ்சள் பைகளை பயன்படுத்துவது, சுற்றுபுற சூழலை பாதுகாத்திட மரங்களை நட்டு வளர்ப்பது போன்ற உறுதிமொழியினை கலெக்டர் சாருஸ்ரீ எடுத்துக்கொண்டார். நிகழ்ச்சியில் திருவாரூர் நகர்மன்ற தலைவர் புவனபிரியாசெந்தில், நகராட்சி கமிஷ்னர் பிரபாகரன், பொறியாளர் அய்யப்பன், மேலாளர் முத்துகுமார், நகராட்சி நியமனகுழு உறுப்பினர் பிரகாஷ் மற்றும் கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.

Related posts

திருச்சி மாவட்டத்தில் 13 மையங்களில் 8,283 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர் 287 பேர் ஆப்சென்ட்

மாநகர எல்லைப்பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க மல்லுகட்டும் ஊழியர்கள் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க மாநகராட்சிக்கு கோரிக்கை

காவலர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி: 2009 பேட்ஜ் காவலர்கள் வழங்கினர்