அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா

அறந்தாங்கி, ஏப்.18: அறந்தாங்கி தீயணைப்பு நிலையத்தின் சார்பில் தீ தொண்டு நாள் வார விழாவை முன்னிட்டு தீ தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை பொதுமக்களிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அறந்தாங்கி தீயணைப்பு நிலைய அலுவலர் வெற்றிசெல்வன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அறந்தாங்கி நகர் பகுதி மற்றும் கட்டுமாவடி முக்கம், எல்லன்புரம் உள்ளிட்ட பகுதியில் எளிதில் தீபிடிக்கும் பொருட்களை வீடுகளில் சேமித்து வைக்காதீர்கள்.

மின்சார தீ விபத்து ஏற்பட்டால் முதலில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டும் தரமான வயர்களை பயன்படுத்த வேண்டும். கடை, அலுவலகங்களை பூட்டுவதற்கு முன் மின் இணைப்பை துண்டித்து பூட்ட வேண்டும்.குழந்தைகளிடம் தீபெட்டி, மெழுகுவத்தி கொடுக்க கூடாது, விளக்கு அருகே விளையாட கூடாது. உள்ளிட்ட விழிப்புணர்வு வாசம் அடங்கிய துண்டு பிரசுரத்தை பொதுமக்களிடம் வழங்கி விழிப்
புணர்வு ஏற்படுத்தினர்.

Related posts

கோடைகால இலவச குத்துசண்டை பயிற்சி முகாம்

துறையூர் அருகே ஆட்டுக்கு தழை பறித்த பெண் கிணற்றுக்குள் விழுந்து உயிரிழப்பு

திருச்சி மாவட்டத்தில் மாஜி படைவீரர்கள் குழந்தைகளுக்கு சார்ந்தோர் சான்று பெற அழைப்பு