விசாரணைக்காக யூடியூபர் சங்கர் சென்னை அழைத்து வரப்பட்டார்


கோவை: பெண் போலீசார் குறித்து ஆபாசமாக பேசிய வழக்கு விசாரணைக்காக யூடியூபர் சங்கரை சென்னைக்கு போலீசார் வேனில் அழைத்து சென்றனர். யூடியூபர் சங்கர் மீது கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார், போலீஸ் உயர் அதிகாரி மற்றும் பெண் போலீசார் குறித்து விமர்சனம் செய்து ஆட்சேபகரமான வீடியோ பதிவு வெளியிட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தேனி மாவட்டத்தில் இவர் ரிசார்ட்டில் தங்கி இருந்தபோது அவர் பயன்படுத்திய காரில் கஞ்சா இருந்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். சென்னையில் 2 பெண்கள் அளித்த புகாரின்பேரிலும் சங்கர் மீது பெண் போலீசார் குறித்து ஆபாசமாக பேசியதாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

இந்த நிலையில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சங்கரை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர். இதைத்தொடர்ந்து அவர் மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இன்று காலை கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சங்கரை பெண் போலீசார் குறித்து ஆபாசமாக பேசிய வழக்கு விசாரணைக்காக சென்னை போலீசார் வேனில் சென்னைக்கு அழைத்து சென்றனர். கடந்த முறை வழக்கு விசாரணைக்காக திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்த சங்கரை பெண் போலீசார் அழைத்து சென்றனர். ஆனால் இந்த முறை சங்கரை, ஆண் போலீசார் பாதுகாப்புடன் சென்னை அழைத்து சென்றனர்.

Related posts

நீட் தேர்வு முறைகேடு: மேலும் 9 மாணவர்களுக்கு நோட்டீஸ்

ஜப்பானில் கடந்த சில நாட்களாக அரிய வகை நோய் விரைவாக பரவி வருகிறது ஜூன் 2 முதல் பாதிப்பு அதிகரிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாதது மேலிடத்தின் உத்தரவு: ப.சிதம்பரம் விமர்சனம்