காளை முட்டி வாலிபர் பலி

வேலூர்: வேலூர் விருப்பாட்சிபுரத்தை சேர்ந்தவர் ஏழுமலை (30), கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி மஞ்சுளா, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நேற்று முன்தினம் பாகாயம் அடுத்த மேட்டுஇடையம்பட்டியில் நடந்த மாடு விடும் விழாவை காண ஏழுமலை சென்றிருந்தார். அப்போது ஒரு காளை திடீரென ஏழுமலையை முட்டியது.

இதில் மார்பு, கழுத்துப்பகுதியில் மாட்டின் கொம்பு குத்தி ரத்தம் கொட்டியது. மயங்கி விழுந்த ஏழுமலையை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் சிறிது நேரத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Related posts

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை கடைசிநாள்

79,500 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி

பரந்தூர் விமான நிலைய திட்டம்; கூடுதல் நிலம் கையகப்படுத்த தமிழ்நாடு அரசு அனுமதி