உலக புகழ்பெற்ற ஈபிள் டவர் மூடல்

பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள உலக புகழ்பெற்ற ஈபிள் டவருக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இந்த நிலையில், ஈபிள் டவரில் பணியாற்றும் ஊழியர்களுடன் நடந்த ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனால் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. இருப்பினும், 134 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஈபிள் டவரின் கீழே கண்ணாடியால் மூடப்பட்டுள்ள திறந்தவெளி பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகள், மக்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஈபிள் டவர் மேலே செல்வதற்கான 300 மீட்டர் பகுதி மட்டுமே மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சென்னை விமான நிலையத்தில் குண்டு வெடிக்கும் என்று இ-மெயில் மூலம் மிரட்டல் வந்ததால் பரபரப்பு

விரைவில் பயன்பாட்டுக்கு வரும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள்!

கோவையில் காட்டு யானை தாக்கி இளைஞர் காயம்