உலக சுற்றுச்சூழல் தினம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிகளில் மரக்கன்று நடும் விழா

கூடலூர் : கூடலூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிகளில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பெண்னை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியர் முருகேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிதர்காடு சரக வனவர் சுரேஷ் முன்நிலை வகித்தார்.பள்ளி மேலாண்மை குழு தலைவர் மீனாட்சி, வனத்துறை பணியாளர்கள், வனக்காப்பாளர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மரங்களின் பங்கு குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

ஒவ்வொரு மாணவ,மாணவியரும் தங்களது பிறந்தநாள் நிகழ்ச்சியாக ஒவ்வொரு மரக்கன்று நட அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து பள்ளி வளாகத்திலும் கிராமப் பகுதிகளிலும் 25க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பாவனா நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டு, நாட்டுப்புறபாடல், கவிதையுடன் மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பந்தலூர்: பந்தலூர் அருகே மேபீல்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா நிகழ்ச்சி நடைப்பெற்றது.பந்தலூர் அருகே உலக சுற்றுச்சூழல் தின விழாவை முன்னிட்டு தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை விடுத்துள்ள அறிவுறுத்தலின்படி கூடலூர் கல்வி மாவட்டம் மேபீல்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்திற்குள் மலர் செடிகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு பெற்றோர்ஆசிரியர் கழக தலைவர் ரஷித் தலைமை வகித்தார்.

பள்ளி மேலாண்மை குழு தலைவர் பிரியாமோள்,தலைமை ஆசிரியர் பால் விக்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.பள்ளி ஆசிரியர்கள், பாபு, ஜெசிக்கா, ஸ்ரீநிவாஸ், பிரோஸ் உள்ளிட்டோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

Related posts

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் உதகை ரோஜா கண்காட்சி மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு

வார விடுமுறையையொட்டி ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்: கோடை விழா ஏற்பாடு தீவிரம்

வெறுப்பை பரப்பும் வகையில் தொடர்ந்து பேசி வரும் பிரதமர் மோடி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: தலைமைத் தேர்தல் ஆணையருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் கடிதம்