4 வீராங்கனைகள் அரை சதம்; முன்னிலை பெற்றது இந்தியா

மும்பை: ஆஸ்திரேலிய மகளிர் அணியுடனான டெஸ்ட் போட்டியில், இந்தியா முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 376 ரன் குவித்து வலுவான முன்னிலை பெற்றுள்ளது. வாங்கடே மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 219 ரன்னில் சுருண்டது (77.4 ஓவர்). அடுத்து களமிறங்கிய இந்தியா முதல்நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்க்உ 98 ரன் எடுத்திருந்தது. மந்தனா 43, ஸ்நேஹ் ராணா 4 ரன்னுடன் நேற்று 2வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். ஸ்நேஹ் ராணா 57 பந்தில் 9 ரன் மட்டுமே எடுத்து வெளியேறினார். சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த மந்தனா 74 ரன் (106 பந்து, 12 பவுண்டரி) விளாசி துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானார். ரிச்சா கோஷ் – ஜெமிமா ரோட்ரிக்ஸ் இணை 4வது விக்கெட்டுக்கு 113 ரன் சேர்த்தது.

இருவரும் அரை சதம் விளாசி அசத்தினர். ரிச்சா 52 ரன், கேப்டன் ஹர்மன்பிரீத் 0, ஜெமிமா 73 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். யஸ்டிகா 1 ரன்னில் வெளியேறினார். இந்திய அணி 78.4 ஓவரில் 274 ரன்னுக்கு 7வது விக்கெட்டை இழக்க… முதல் இன்னிங்ஸ் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், தீப்தி சர்மா – பூஜா வஸ்த்ராகர் பொறுப்பாக விளையாடி ஆஸி. பந்துவீச்சாளர்களின் பொறுமையை சோதித்தனர். 2வது நாள் முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 376 ரன் எடுத்துள்ளது (119 ஓவர்). தீப்தி 70 ரன், பூஜா 33 ரன்னுடன் களத்தில் உள்ளனர். ஆஸி. தரப்பில் ஆஷ்லி கார்டனர் 4, கார்த், ஜோனசன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்திய அணி 3வது நாளான இன்று 157 ரன் முன்னிலையுடன் முதல் இன்னிங்சை தொடர உள்ளது.

Related posts

வாக்கு எண்ணிக்கை நாளில் ரொம்ப உஷாராக இருங்க… முகவர்களுக்கு செல்வப்பெருந்தகை அறிவுறுத்தல்

101வது பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் நினைவிடத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை: தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகளுக்கு ஏற்பாடு

ஏஐ மற்றும் டேட்டா சயின்ஸில் பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு குறுகிய கால சான்றிதழ் படிப்பு: ஏ.ஐ.சி.டி.இ அறிமுகம்