பெண் தீண்டாமைக்கு எதிராக விழிப்புணர்வு: மாணவிகள் 4500 பேர் உலக சாதனை முயற்சி

நெல்லை: பெண் தீண்டாமைக்கு எதிராக நெல்லை ராணி அண்ணா அரசு கல்லூரி மாணவிகள் சுமார் 4500 பேர் துளி வடிவில் அமர்ந்து உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். பெண் தீண்டாமைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ராணி அண்ணா கல்லூரி மற்றும் தனியார் அமைப்பினர் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில் நெல்லை மேயர் சரவணன், மண்டல தலைவர் மகேஸ்வரி, தாசில்தார் ஜெயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். இதுகுறித்து கல்லூரி முதல்வர் மைதிலி கூறுகையில், ‘பெண்களுக்கு உடல் ரீதியாக ஏற்படும் மாற்றத்தை இயல்பாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

அது இயற்கை. அந்த காலங்களில் பெண்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் அல்லது வேலை செய்யும் பகுதியில் ஓய்வு எடுக்க வசதி செய்து தர வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரியில் நாப்கின் மற்றும் அதை அகற்றும் இயந்திரம் வைப்பதை கட்டாயமாக்க வேண்டும்.’ என்றார்.கல்லூரி மாணவிகள் கூறுகையில், ‘பெண்களின் உடலில் இயற்கையாக நடைபெறும் உயிரியியல் மாற்றத்தை பயன்படுத்தி அவர்களை ஒதுக்கக்கூடாது. சில வீடுகளில் மாதவிலக்கு காலங்களில் பூஜைக்கு வராதே, ஓரமாக இரு, கோயிலுக்குச் செல்லக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிப்பார்கள். அது பெண்களுக்கு எதிரான தீண்டாமை. அதுகுறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் தேவை.’ என்றனர்.

Related posts

ஜூன்- 02: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை!.

இறுக்கமான முகத்தோடு சொந்த ஊர் வந்து சேர்ந்த இலைத்தலைவரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சொல்லிட்டாங்க…