தென்கொரியாவில் 2024 குளிர்கால இளையோர் ஒலிம்பிக் போட்டி: 78 நாடுகளில் இருந்து 1800 வீரர்கள் பங்கேற்பு

தென்கொரியா: 2024 குளிர்கால இளையோர் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா தென்கொரியாவில் வெகு விமரிசையாக நடைபெற்றது. குளிர்கால இளையோர் ஒலிம்பிக் போட்டியானது ஜனவரி 19 முதல் பிப்ரவரி 1ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் அமெரிக்கா, உக்ரைன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கின்றன.

இந்த நிலையில் தொடக்க விழா நிகழ்வானது கேங்வோன் நகரில் நடைபெற்றது.தென்கொரியா அதிபர் யூன் சுக்-இயோல், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பேச் உள்ளிட்டோர் தொடக்க விழாவில் கலந்துகொண்டனர். விழாவின் அங்கமாக பல்வேறு காலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குளிர்கால இளையோர் ஒலிம்பிக்கில் 15 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் 78 நாடுகளிலிருந்து 1800 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.

Related posts

வாக்கு எண்ணிக்கை நாளில் ரொம்ப உஷாராக இருங்க… முகவர்களுக்கு செல்வப்பெருந்தகை அறிவுறுத்தல்

101வது பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் நினைவிடத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை: தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகளுக்கு ஏற்பாடு

ஏஐ மற்றும் டேட்டா சயின்ஸில் பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு குறுகிய கால சான்றிதழ் படிப்பு: ஏ.ஐ.சி.டி.இ அறிமுகம்