விம்பிள்டன் டென்னிஸ்: ஜோகோவிச், ஸ்வியாடெக் 2வது சுற்றில் வெற்றி

லண்டன்: கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் 3வது நாளான நேற்று மழையால் பெரும்பாலான ஆட்டங்கள் பாதிக்கப்பட்டன. மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் நம்பர் ஒன்வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், 6-2, 6-0 என்ற செட் கணக்கில், ஸ்பெயினின் சாரா சொரிப்ஸ் டார்மோவை வீழ்த்தி 3வதுசுற்றுக்குள் நுழைந்தார். முதல் சுறறில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ், ஸ்பெயினின் பவுலா படோசா, செக்குடியரசின் கிரெஜிகோவா, பெட்ரா கிவிட்டோவா உள்ளிட்டோரும் வெற்றிபெற்றனர்.

8ம் நிலை வீராங்கனை மரியா சக்கரி, செக்குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா ஆகியோர் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினர். ஆடவர் ஒற்றையர் 2வது சுற்றில் 2ம் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச், 6-3,7-6,7-5 என ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்சை வீழ்த்தி 3வது சுற்றுக்குள் நுழைந்தார்.

Related posts

மக்களவைத் தேர்தல்: 57 தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்