விம்பிள்டன் டென்னிஸ் 3வது சுற்றில் குவித்தோவா

லண்டன்: விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் விளையாட, செக் குடியரசின் பெத்ரா குவித்தோவா தகுதி பெற்றார். 2வது சுற்றில் பெலாரஸ் வீராங்கனை அலெக்சாண்ட்ரா சாஸ்னோவிச்சுடன் (29 வயது, 69வது ரேங்க்) நேற்று மோதிய குவித்தோவா (33 வயது, 9வது ரேங்க்) அதிரடியாக விளையாடி 6-2, 6-2 என நேர் செட்களில் வென்றார். இப்போட்டி 1 மணி, 14 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. முன்னணி வீராங்கனைகள் அரினா சபலென்கா (பெலாரஸ்), மேடிசன் கீஸ் (அமெரிக்கா), பியான்கா ஆண்ட்ரீஸ்கு (கனடா), மார்தா கோஸ்டியுக் (உக்ரைன்) ஆகியோரும் 3வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் நேற்று களமிறங்கிய ரஷ்ய வீரர் டானில் மெத்வதேவ் 6-3, 6-3, 7-6 (7-5) என்ற நேர் செட்களில் பிரான்சின் அட்ரியன் மன்னரினோவை வீழ்த்தினார். அலெக்சாண்டர் ஸ்வெரவ் (ஜெர்மனி), மார்டன் புக்சோவிக்ஸ் (ஹங்கேரி), ஹூபர்ட் ஹர்காக்ஸ் (போலந்து), மேட்டியோ பெரட்டினி (இத்தாலி) ஆகியோரும் 3வது சுற்றில் விளையாட தகுதி பெற்றுள்ளனர்.

Related posts

சிறார் வாகனம் ஓட்டினால் வாகனத்தின் உரிமம் ரத்து என்ற விதிமுறை தமிழகத்தில் அமல் ஆவதில் தாமதம்

வட மாநிலங்களில் வாட்டிவரும் வெப்ப அலை: உ.பி.யில் 25 தேர்தல் பணியாளர்கள் பலி

வெயிலின் தாக்கத்தால் மின்சார தேவை அதிகரித்துள்ள நிலையில் டான்ஜெட்கோ தலைவர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்