விரட்டி விரட்டி வெளுக்க தோணுது… காட்டு யானையிடம் இருந்து தப்பி பிழைத்த தமிழக வாலிபர்

தமிழகத்தைச் சேர்ந்த சில சுற்றுலா பயணிகள் கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஒரு காரில் கேரள மாநிலம் வயநாடுக்கு சுற்றுலா சென்றனர். இங்குள்ள முத்தங்கா வனவிலங்கு சரணாலயம் அருகே சென்று கொண்டு இருந்தபோது ரோடு அருகே ஒரு யானை குட்டிகளுடன் நின்று கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் காரில் இருந்த ஒருவர் யானையின் அருகே சென்று போட்டோ எடுக்க முயன்றார். உடனே காட்டு யானை ஆவேசத்துடன் அந்த நபரை தாக்குவதற்காக துரத்தியது. அதிர்ச்சியடைந்த அந்த நபர் அங்கிருந்து ஓட முயன்றபோது தடுமாறி கீழே விழுந்தார்.

இந்த சமயத்தில் அந்த வழியாக வனத்துறையினரின் 3 சபாரி வேன் வந்தது. யானை வருவதைப் பார்த்ததும் வனத்துறையினர் உடனடியாக சத்தம் எழுப்பி அதை விரட்டினர். தொடர்ந்து, அந்த யானை காட்டுக்குள் சென்றது. வனத்துறையினர் தக்க சமயத்தில் வந்ததால் அந்த நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை வனத்துறையினர் பிடித்து விசாரித்தனர். தொடர்ந்து அந்த நபருக்கு ரூ.4000 அபராதம் விதித்தனர். மீண்டும் இதேபோல் செயலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து வனத்துறையினர் அவரை விடுவித்தனர்.

Related posts

ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்ல பதிவு செய்த அனைவரும் இ-பாஸ் பெற்றுள்ளனர்: தமிழ்நாடு அரசின் எளிமையான நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டு

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து: பலி 10ஆக உயர்வு

நடு வழியில் திடீர் பிரேக் டவுன்; 3 மணிநேரம் போக்குவரத்தை திணறடித்த அரசு பஸ்: மார்த்தாண்டம் ஜங்சன் பகுதியில் அணிவகுத்த வாகனங்கள்