ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டும் ஜனாதிபதியை அழைக்காதது ஏன்?: பிரேமலதா விஜயகாந்த் கேள்வி

ஆலங்குளம்: ‘புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவுக்கு ஜனாதிபதியை அழைக்காதது ஏன் என்று ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டும்’ என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்து உள்ளார். தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தேமுதிக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்து பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது: அடிப்படை வசதி சரியில்லை என சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை உள்பட தமிழ்நாட்டில் 3 அரசு மருத்துவமனைகளில் ஒன்றிய அரசு மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் 1500 மாணவர்க ளின் எதிர்காலம் கேள்விகுறியாகியுள்ளது. இதற்கு உடனடியாக சுகாதாரத்துறை அமைச்சர் தீர்வுகாண வேண்டும். டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மைய பகுதியில் செங்கோல் வைத்தி ருப்பது தமிழர்களுக்கு கிடைத்த பெருமை. இவ்வாறு அவர் பேசினார். இதைத்தொடர்ந்து நிருபர்களிடம் பிரேமலாதா கூறுகையில், ‘புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவுக்கு ஜனாதிபதி அழைக்கப்படாதது வருத்தமளிக்கிறது. இதற்கு ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டும்’ என்றார்.

Related posts

மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தின்கீழ் 12 மாவட்டங்களில் ₹306 கோடி வசூலிப்பு: சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல்

திருப்பதியில் இருந்து சென்னைக்கு காளஹஸ்தி வழியாக சென்ற கார், பேருந்து மீது மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

வாட்டி வதைக்கும் கோடை வெப்பம்; சரும நோய்களில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி..? மருத்துவர்கள் தரும் புதிய தகவல்