‘நடைபயணத்தில் என்ன பண்ணீங்க… 6 கிலோ எடை குறைச்சி இருக்கேன்’

மதுரை: மதுரையில் நடந்து வரும் தொழில் முனைவோர் மாநாட்டில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். பின்னர் அவர் அளித்த பேட்டி: அரசு கொண்டுவரும் அனைத்து மசோதாவையும் ஏற்க வேண்டிய அவசியம் கவர்னருக்கு இல்லை. வெற்றி, தோல்வியை சரியாக கையாள நம் நாட்டுக்கு மனப்பக்குவம் வர வேண்டும். கிரிக்கெட்டை வெறும் விளையாட்டாக மட்டுமே பார்க்க வேண்டும். பாத யாத்திரை மேற்கொண்ட பிறகு 6 கிலோ எடை குறைந்துள்ளேன்.இவ்வாறு கூறினார்.

அண்ணாமலை நடைபயணம் தொடங்கியது முதல் பல்வேறு சர்ச்சைகள் வருகிறது. அது நடைபயணமா? சொகுசு பஸ் பயணமா? என்ற சந்தேகம் இன்னும் பாஜவினர் இடையே உள்ளது. இந்த நடைபயணம் குறித்து கருத்து தெரிவித்திருந்த அரசியல் கட்சி தலைவர்கள், சுகர், பிபியை குறைத்து உடலை பாதுகாக்க அவர் நடைபயணம் மேற்கொள்கிறார் என்று கூறி வந்தனர். இதை உறுதிப்படுத்தும் வகையில் 6 கிலோ எடை குறைத்து உள்ளதாக அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.

Related posts

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் அலை சீற்றத்துடன் காணப்படும்: வானிலை மையம் எச்சரிக்கை

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு