வார விடுமுறை நாளில் களைகட்டிய சுற்றுலா தலங்கள்

ஊட்டி : நீலகிரி மாவட்டம் ஊட்டி சர்வதேச புகழ்பெற்ற சுற்றுலா நகரமாகும். இங்குள்ள குளு குளு காலநிலையை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்து செல்கின்றனர். கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து நிலவி வரம் தற்போது உள்ளது. இதுதவிர பகலில் கடுமையான வெயிலும் உள்ளது. பள்ளிகளில் பொதுத்தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் வார நாட்களில் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் மிக குறைவாகவே உள்ளது.

இதுதவிர ரமலான் நோன்பு காரணமாக கேரளாவில் இருந்து வரக்கூடிய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் சரிந்துள்ளது. அதே நேரம் வார இறுதி நாட்களில் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்கள் களைகட்டி காணப்படுகிறது. வார விடுமுறை நாளான நேற்று ஊட்டியில் வழக்கத்தைவிட சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதற்கேற்ப குளு குளு ரம்மியமான காலநிலை நிலவிதால் இதனை அனுபவித்தபடியே சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்தனர்.

குறிப்பாக ஊட்டி படகு இல்லத்தில் இருந்து ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும் ஊட்டி வர்க்கி, நீலகிரி தைலம், ஹோம்மேட் சாக்லேட் உள்ளிட்டவற்றை வாங்கி செல்ல ஆர்வம் காட்டினர். இதன் காரணமாக கமர்சியல் சாலையில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்களிலும் கூட்டம் காணப்பட்டது.

Related posts

மக்களவைத் தேர்தல்: 57 தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்