நீர், மோர் பந்தல் திறப்பு


பொன்னேரி: மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் வெள்ளி வாயல் ஊராட்சியில் நீர் மோர் பந்தலை மாவட்ட செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ திறந்து வைத்து பொதுமக்களுக்கு கோடை கால தாக்கத்திற்கு இளநீர், மோர், குடிநீர் குளிர்பானங்கள் ஆகியவற்றை வழங்கினார். இந்த விழா ஏற்பாடுகளை மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் யுவராஜ் செய்திருந்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் லோகேஷ், கிழக்கு ஒன்றிய செயலாளர் வல்லூர் எம்.எஸ்.கே ரமேஷ் ராஜ் முன்னிலையில் நடந்தது. இதில் திமுக பொறுப்பாளர்கள் அன்புவாணன், மோகனசுந்தரம், ராமமூர்த்தி, கலைவாணன், ஜானகிராமன், கன்னிமுத்து, செல்வமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் காட்டூர் காவல் நிலைய அருகே இளைஞர் அணி திமுக சார்பில் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் காணியம்பாக்கம் ஜெகதீசன் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தலை மாவட்ட செயலாளர் டி.ஜெ கோவிந்தராஜன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி, இளநீர், மோர், குளிர்பானங்களை வழங்கினார். இதில் தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் தன்சிங், மணி, பாண்டுரங்கன், ஸ்டாலின், தேவராஜ் ஹரி, ராஜேஷ், சோழவரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாதவரம் கிராமத்தில் சோழவரம் ஒன்றிய திமுக செயலாளர் செல்வசேகரன் முன்னிலையில் நீர் மோர் பந்தலை டி.ஜெ‌.கோவிந்தராசன் எம்எல்ஏ திறந்து வைத்தார்.

அப்போது பொதுமக்களுக்கு வெள்ளரிகாய், இளநீர், மாம்பழம், தர்பூசணி, நீர், மோர் மற்றும் குளிர்பானங்களை வழங்கினர். மேலும் பேருந்தில் கடும் வெயிலில் பயணித்தவர்களுக்கு பொருட்களை பேருந்திலையே சென்று வழங்கினர். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோன்று, பொன்னேரி பேரூராட்சியில் நகர திமுக செயலாளர் வழக்கறிஞர் ரவிக்குமார் மற்றும் பொன்னேரி நகர் மன்ற தலைவர் பரிமளம் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலையில் திருப்பாலைவனம் மற்றும் மெதூரில் கிராமத்தில் ஒன்றிய கழகச் செயலாளர் சுகுமாரன் முன்னிலையிலும் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. மீஞ்சூர் பேரூராட்சியில் பேரூர் திமுக செயலாளர் தமிழ் உதயன் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. இதில் துணைத் தலைவர் அலெக்சாண்டர் மீஞ்சூர் பேரூர் திமுக செயலாளர் மோகன்ராஜ், முன்னாள்மாவட்ட அவைத் தலைவர் மு.பகலவன், பொன்னேரி இராமலிங்கம், தீபன், வாசுதேவன், மெதூர் சிலம்பரசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி ரமேஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே பூண்டி ஒன்றியம் கச்சூர் மற்றும் சீத்தஞ்சேரி பஜார் பகுதியிலும் கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்கும் விதமாக திமுக இளைஞரணி சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், வடக்கு ஒன்றிய செயலாளர் ஜான் பொன்னுசாமி தலைமை தாங்கினார். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் லோகேஷ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சங்கர், யுவராஜ் மற்றும் பூண்டி கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் சிவய்யா, சித்ரா பாபு, மாவட்ட கவுன்சிலர் சுதாகர் மற்றும் வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் அவைத்தலைவர் ராகவன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் வேல்முருகன், குருமூர்த்தி, மாவட்ட பிரதிநிதிகள் சீனிவாசலு, நாகராஜ், ரகு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன், மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் அப்துல் மாலிக் ஆகியோர் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர், மோர் மற்றும் குளிர்பானங்களையும், பழ வகைகளையும் வழங்கினர். நிர்வாகிகள் ரஞ்சித், சத்யா, வேலு, டார்லிங் ராஜா, சுரேஷ், காண்டீபன், வக்கில் சோமசுந்தரம், அரிகரன், கஜேந்திரன், பாபு, பிரபாகரன், வாசு, பாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

திருச்சி ரயில் நிலையத்தில் பரபரப்பு கவர்ச்சி நடனமாடி ரீல்ஸ் வெளியிட்ட இளம்பெண்கள்: அபராதம் விதித்து போலீஸ் எச்சரிக்கை

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஒரே நாளில் 100 திருமணம்: விசாகத்தையொட்டி பாதயாத்திரையாக குவியும் பக்தர்கள்

அரூர் அருகே சித்தேரியில் கனமழை காட்டாற்றில் வெள்ளப்பெருக்கால் 7 மலை கிராமங்கள் துண்டிப்பு: கயிறு கட்டி சாலையை கடக்கும் மக்கள்