விழுப்புரம் கோரலூர் கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் சடலத்தை தோளில் சுமந்த கிராம மக்கள்: சாலை வசதி வேண்டி ஒப்பாரி பாடல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கோரலூர் கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் இருளர் இன மக்கள் அவதிகுள்ளாகியுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் கோரலூர் கிராமத்தில் 3 தலைமுறைகளாக இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். அங்கு சாலை வசதி இல்லாததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அங்கு வாழும் மக்களின் அன்றாட தேவைக்கு கூட அதிக தூரம் நடத்து சென்று பயணம் செய்யும் நிலை உள்ளது. அவர்கள் பேருந்தில் பயணம் செய்ய கோரலூருக்கு அருகில் உள்ள ஊருக்கும் செல்ல வேண்டி உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் கோரலூரில் கும்பன் என்பவர் உயிரிழந்தார். இந்த நிலையில், அமரர் வாகனத்தை அவர் வீட்டின் அருகே கொண்டு செல்ல முடியாததால் சடலத்தை தோளில் சுமந்து செல்லும் நிலை ஏற்பட்டது. பின்னர் சடலத்தை தோளில் சுமந்து சென்று இறுதி ஊர்வலத்தை முடித்தனர். இறுதி ஊர்வலத்தின் போது இருளர் மூதாட்டி கம்சலா என்பவர் சாலை வசதி வேண்டி சேற்றில் இறங்கி ஒப்பாரி பாடல் பாடினர். பின்னர் இருளர் இன மக்கள் கோரலூர் கிராமத்திற்கு சாலை வசதி வேண்டி கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

கேரளாவில் இன்று மீண்டும் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது

உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: 50 பவுன் நகை பறிமுதல்