வாய்ப்பு கேட்ட விஜயதரணி காத்திருக்க சொன்ன அமித்ஷா

நாகர்கோவில், மறவன்குடியிருப்பு ஆயுதப்படை மைதானத்தில் ஹெலிகாப்டரில் வந்திறங்கிய அமித்ஷாவை விஜயதரணி சால்வை வழங்கி சற்று நேரம் உரையாடினார். இந்தியிலும், ஆங்கிலத்திலும் அவர்களது உரையாடல் நீண்டது, பாஜ வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பிற தலைவர்கள் சுற்றி நின்றுகொண்டிருந்தனர். காங்கிரசில் இருந்து விலகி சமீபத்தில் விஜயதரணி பாஜவில் இணைந்தார்.

தேர்தலில் போட்டியிட சீட் தருவார்கள் என காத்திருந்தார். ஆனால், பாஜ அவருக்கு நாமத்த போட்டது. இதனால் விரக்தியில் இருந்த விஜயதரணி அமித்ஷாவிடம் முறையிட்டுள்ளார். அப்போது, அமித்ஷா, ‘உங்களது திறமைகள், பணிகள் எல்லாம் எனக்கு தெரியும், பணியாற்றுங்கள் பார்த்து கொள்ளவாம் வாழ்த்துகிறேன்’ என்று அமித்ஷா கூறியுள்ளார்.

Related posts

மக்களவைத் தேர்தல்: 57 தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்