தண்டராம்பட்டு அடுத்த பெருங்குளத்தூரில் ஆடிப்பெருக்கையொட்டி வேணுகோபால் சுவாமி தீர்த்தவாரி

*பக்தர்கள் புனித நீராடி வழிபட்டனர்

தண்டராம்பட்டு : தண்டராம்பட்டு அடுத்த பெருங்குளத்தூரில் வேணுகோபால் சுவாமி தீர்த்தவாரி வெகுவிமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் புனிதநீராடி வழிபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த பெருங்குளத்தூர் ஊராட்சியில் உள்ள வேணுகோபால் சுவாமி கோயிலில் ஆடிப்பெருக்கு விழாவினை முன்னிட்டு தீர்த்தவாரி நடை
பெற்றது.

விழாவினை முன்னிட்டு நேற்று காலை சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக புறப்பட்டு ராயண்டபுரம் தென்பெண்ணை ஆற்றினை அடைந்தது. தொடர்ந்து அங்கு தீர்த்தவாரி வெகு விமரிசையாக நடைபெற்றது.இதில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திராளான பக்தர்கள் பங்கேற்று தென்பெண்ணை ஆற்றில் புனித நீராடி சுவாமியை வழிபட்டனர்.

Related posts

மக்களவைத் தேர்தல்: 57 தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்