வேலூர் அடுத்த பொய்கையில் இன்று ₹70 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் பொய்கை மாட்டுச்சந்தை மிகப்பிரபலமான மாட்டுச்சந்தையாகவும், அதேபோல் ஒடுகத்தூர், கே.வி.குப்பம் போன்றவை ஆட்டுச்சந்தைகளுக்கு பிரபலமானவையாகவும் உள்ளன. மேற்கண்ட இடங்களுக்கு வெளிமாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான ஆந்திராவின் சித்தூர், திருப்பதி, கடப்பா மாவட்டங்களில் இருந்தும், கோலார் மாவட்டத்தில் இருந்தும் கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

பொங்கல் திருநாளை தொடர்ந்து வந்த 3 சந்தைகளில் வர்த்தகம் என்பது ₹80 முதல் ₹1 கோடி வரை ஆனது. இந்நிலையில் கோடைக்காலம் நெருங்கும் நிலையில் அதிகளவில் கால்நடைகள் வழக்கத்துக்கு மாறாக அதிகளவில் வரும். அதற்கு கோடையில் வழக்கமாக வரும் தீவனப்பற்றாக்குறை காரணமாக கூறப்படும். அதேபோல் இன்று பொய்கை மாட்டுச்சந்தையில் வழக்கத்தை விட அதிகளவில் மாடுகள், கோழிகள், ஆடுகள் என கால்நடைகள் குவிந்தன. ஆனால் வர்த்தகம் என்பது ₹70 லட்சம் அளவிலேயே நடந்திருக்கும் என்றும், இந்த நிலை வருங்காலங்களில் மாறும் வாய்ப்பு உள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related posts

கேரளாவில் இன்று மீண்டும் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது

உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: 50 பவுன் நகை பறிமுதல்