வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழா தாம்பரம்-வேளாங்கண்ணி சிறப்பு ரயில்

சென்னை: வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழாவையொட்டி தாம்பரம்-வேளாங்கண்ணி சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழாவையொட்டி தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. கூட்ட நெரிசலை குறைப்பதற்காக தாம்பரத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் (06003) விடப்பட்டுள்ளது. இந்த சிறப்பு கட்டண ரயில் தாம்பரத்திலிருந்து வரும் 28ம் தேதி இரவு 9 மணிக்கு புறப்பட்டு வேளாங்கண்ணிக்கு அதிகாலை 4.30 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கத்தில் வேளாங்கண்ணியில் இருந்து 29ம் தேதி இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 3.15 மணிக்கு தாம்பரம் வந்து சேரும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related posts

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் செங்கொடி ராணுவ கூட்டு பயிற்சியில் இந்திய விமானப்படையின் ரஃபேல் போர்விமானம் பங்கேற்பு..!!

சென்னை விமான நிலையத்தில் குண்டு வெடிக்கும் என்று இ-மெயில் மூலம் மிரட்டல் வந்ததால் பரபரப்பு

விரைவில் பயன்பாட்டுக்கு வரும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள்!