வேளச்சேரி, மேடவாக்கத்தில் எ.வ.வேலு நிவாரண உதவி நிவாரண உதவிகளை வழங்கினார் அமைச்சர் எ.வ.வேலு..!!

சென்னை: வேளச்சேரி மற்றும் மேடவாக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார். மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னையில் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதையடுத்து உடனே அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி ஊழியர்கள் களத்தில் இறங்கி வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்கவைத்து வருகிறனர்.

மேலும் வெள்ளம் அதிகமாகத் தேங்கியுள்ள இடங்களில் படகுகள் மூலம் தேசிய பேரிடர் மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் மக்களைப் பாதுகாப்பாக மீட்டு நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் சென்று வருகின்றனர். இந்த மீட்புப் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது. மேலும் அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அமைச்சர் எ.வ.வேலு, வேளச்சேரி பகுதிப் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பணிகளை ஆய்வு மேற்கொண்டு, ஜே.சி.பி. வாகனத்தில் அமர்ந்து நீர் தேங்கிய பகுதிகளில் உணவு, நிவாரண பொருட்களை வழங்கினார். தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் வீடு வீடாகச் சென்று நிவாரண பொருட்களை வழங்கினார்.

15,000 உணவு பொட்டலங்கள் வழங்கிய அமைச்சர் எ.வ.வேலு

பாதிக்கப்பட்ட மக்களுக்கு 15000 உணவு பொட்டலங்கள், 30,000 பால் பாக்கெட்டுகளையும், 20,000 தண்ணீர் பாட்டில்கள், 10,000 ரொட்டி பாக்கெட்டுகளையும் வேளச்சேரி, மேடவாக்கம் மக்களுக்கு வழங்கினார்.

Related posts

நாட்டரசன்கோட்டை ரயில் நிலையத்திற்கு கிடைக்குமா ‘கிரீன் சிக்னல்’: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ஓவேலியில் 125 ஆண்டுகளை கடந்தும் போக்குவரத்துக்கு பயன்படும் இரும்பு பாலம்

நத்தம் அருகே கோயில் திருவிழாவில் கழுமரம் ஏறி அசத்திய இளைஞர்கள்