மீஞ்சூர் அருகே வன்னிப்பாக்கம் ஏரிக்கரை உடைப்பு: ஊராட்சி மன்ற தலைவர் மீது புகார்

பொன்னேரி,: மீஞ்சூர் ஒன்றியம் வன்னிப்பாக்கம் ஊராட்சியில் சின்ன ஏரிக்கரையினை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா பஞ்சாச்சாரம் தனது ஆட்களுடன் சென்று ஏரிக்கரையினை உடைத்து விட்டார். இதனால், வரும் மழைக்காலங்களில் ஏரி தண்ணீர் ஊருக்குள் பாயும் அபாயம் உள்ளது. மேலும் தண்ணீர் வீணாக செல்வதால் விவசாயத்துக்கு தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் அவதிப்பட நிலை ஏற்படும்.

உடனடியாக ஏரி கரையினை பலப்படுத்தி சீர் செய்ய வேண்டும் என திமுக கிளைச் செயலாளரும், ஏரி நீர் பாசன சங்கத் தலைவர் முரளி மீஞ்சூர் காவல் நிலையத்திலும், நீர்ப்பாசன பிரிவு உதவி பொறியாளர் இடத்திலும் புகார் செய்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

Related posts

தங்க கடத்தலில் ஈடுபட்ட விமான பெண் ஊழியர் கைது!

உடல் நலம் தேறி வரும் பெண் யானை!

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பு போர்நிறுத்தத்திற்கு அழைப்பு: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தகவல்