ஊத்துக்கோட்டை அருகே மாளந்தூர் கிராமத்தில் தண்ணீரின்றி நெற்பயிர்கள் கருகுவதால் வேதனை

ஊத்துக்கோட்டை: திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே மாளந்தூர் ஊராட்சியில் சுமார் 350 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள், மல்லி, கத்திரி உள்ளிட்டவற்றை சாகுபடி செய்து வருகின்றனர். முக்கிய தொழிலாக விவசாயம் இருப்பதால் இதை நம்பி ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். விவசாயம் மற்றும் வீடுகளுக்குஊத்துக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் இருந்து மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த ஒரு மாதமாக போதிய அளவு மின்சாரம் இல்லை என்று தெரிகிறது. மேலும் குறைந்த மின் அழுத்தம் காரணமா அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதன்காரணமாக வயல்களுக்கு முறையாக தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் அனைத்தும் கருகி விடுகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை, விரக்தியில் உள்ளனர்.

இதுகுறித்து ஊராட்சிமன்ற தலைவர் விஜயன், ஊத்துக்கோட்டை மின்சார வாரிய அலுவலகத்துக்கு சென்று கேட்டபோதும் சரியான பதில் இல்லை என்று தெரிகிறது. எனவே மாளந்தூர் கிராமத்துக்கு சீரான மின்சாரம் விநியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related posts

காஞ்சிபுரத்தில் சீருடையில் இருந்த பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு

சென்னை விமானநிலையத்திற்கு 5வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்: தீவிர பாதுகாப்பு நடவடிக்கை

சேலம் அருகே காரில் வந்து பூட்டியிருந்த வீடுகளில் கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் கைது