அமெரிக்க அதிபர் மனைவிக்கு கொரோனா

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஜில் பைடனுக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, அதிபர் ஜோ பைடனுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அவருக்கு பாதிப்பு இல்லை என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன் பியர் தெரிவித்துள்ளார். அதிபர் ஜோ பைடனுக்கு தொடர்ந்து பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் கொரோனா அறிகுறிகள் உள்ளதா என்பது கண்காணிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். ஜில் பைடன் தற்போது டெலோவர் நகரில் ரெஹோபோத் கடற்கரையில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

Related posts

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு

காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு பகல் நேரத்தில் சண்டை நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு

காதலுக்கு வயது தடையில்லை 80 வயது தாத்தாவை காதலித்து மணந்த 23 வயது இளம்பெண்