அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பாரில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5பேர் உயிரிழப்பு..!!

வாஷிங்டன் :  கலிபோர்னியாவில் உள்ள ஆரஞ்ச் கவுண்டியின் டிராபுகோ கேன்யனில் உள்ள மதுபான விடுதியில் இன்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. சாண்டியாகோ கனியன் சாலையில் உள்ள குக் கார்னர் என்ற இடத்தில் பைக்கர் பாரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. போலீசாரின் தகவல்படி , பாரில் ஸ்பாகெட்டி நைட் இருந்தபோது துப்பாக்கிச் சூடு நடந்தது. இந்த தாக்குதலில் சுமார் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி, 6 பேர் காயமடைந்தனர்

இந்த துப்பாக்கிச்சூட்டில் சுமார் 6 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ஓய்வு பெற்ற சட்ட அமலாக்க அதிகாரி என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓய்வு பெற்ற சட்ட அமலாக்க அதிகாரிக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. தகராறு தீவிரமடைந்ததை அடுத்து, அதிகாரி பதினொரு பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

சம்பவத்தின் பின்னர் 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஐந்து பேர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களினால் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் மதுக்கடையின் தரை முழுவதும் ரத்தக் கறைகளும் உடைந்த கண்ணாடிகளுமாக காணப்படுகிறது. இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பான வீடியோக்களும் படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Related posts

இந்தியா கூட்டணி நாட்டை வழிநடத்தும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு மடல்

முக்கிய துறைகளை கேட்கும் தெலுங்குதேசம் கட்சி..!!

பிரதமர் மோடியின் ராஜினாமாவை ஏற்றார் ஜனாதிபதி..!!