அமெரிக்காவில் கைதான 2 சீக்கியருக்கு இந்தியாவில் கொலை வழக்கில் தொடர்பு

வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சீக்கிய குருத்வாரா தாக்குதல் தொடர்பாக 17 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் சீக்கியர்கள். இந்நிலையில் கைதான சீக்கியர்களின் இரண்டு பேருக்கு இந்தியாவில் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடையது தெரியவந்துள்ளது. இது குறித்து கலிபோர்னியா அட்டர்னி ஜெனரலின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘‘பவித்தர் சிங் மற்றும் ஹூசன்தீப் சிங் ஆகியோருக்கு இந்தியாவில் பல்வேறு கொலை சம்பவங்களில் தொடர்புடையது தெரியவந்துள்ளது. அவர்களது குடியுரிமை இதுவரை வெளியிடப்படவில்லை என்றாலும் அவர்கள் இந்திய குடிமக்கள் என்று நம்பப்படுகின்றது’’ என்றார்.

Related posts

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் லண்டனில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய மாணவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு..!!

உலகின் தலைசிறந்த நிறுவனங்களின் பட்டியலில், முதல் 100 இடங்களுக்குள் இந்தியாவைச் சேர்ந்த 4 நிறுவனங்கள்

பாக்கெட் சைஸ் அரசியல் சாசன புத்தகத்தின் விற்பனை அதிகரிப்பு: EBC தகவல்