ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் ஆம்னி கார் திடீரென தீப்பற்றி எரிந்து நாசம்

கூடுவாஞ்சேரி: ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் ஆம்னி கார் திடீரென தீப்பற்றி எரிந்து நாசமானது. இதில், ஆட்டோ டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சென்னை, சாலிகிராமம், தசரதபுரத்தை சேர்ந்தவர் அப்துல்கலாம் ஆட்டோ டிரைவர் (55). இவருக்கு மனைவி, 2 மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளனர். இந்நிலையில், புதுக்கோட்டை அருகே காரைக்குடியில் அடுத்த திருமயம் என்ற கிராமத்தில் உள்ள தனது மனைவியின் தங்கை வீட்டிற்கு திருமண நிகழ்ச்சியில் ஒன்று கலந்துகொள்வதற்காக அப்துல்கலாம் நேற்று காலை 6 மணி அளவில் சாலிகிராமத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி தனது மனைவியின் தங்கைக்காக வாங்கி இருந்த ஆம்னி காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் செல்லும்போது, ஆம்னி காரில் இருந்து திடீரென புகை மூட்டம் கிளம்பியது. இதனை கண்டதும் அப்துல்கலாம், ஆம்னி காரை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு இறங்கினார். அதற்குள், தீ பற்றி மளமளவென என தீ எறிய தொடங்கியது. இதுகுறித்து அவர் மறைமலைநகர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீயணைப்பு வீரர்கள் தீ பற்றி எரிந்து கொண்டிருந்த ஆம்னி காரில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். அதற்குள் ஆம்னி கார் தீயில் கருகி நாசமாகி எலும்பு கூடானது. இதுகுறித்து அவர் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார் புகாரின்பேரில் கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதி நேற்று காலை பரபரப்பும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

* வாங்கிய மூன்றே நாளில் எரிந்து நாசமான கார்
அப்துல்கலாம் தனது மனைவியின் தங்கை குடும்பத்தினர் கிராமப்புறத்தில் பயன்படுத்தி கொள்வதற்காக கடந்த 20ம் தேதி அன்று ரூ.85 ஆயிரம் பணம் கொடுத்து செகண்ட்டில் ஆம்னி காரை வாங்கி உள்ளார். அதை கொடுப்பதற்காக எடுத்து சென்றுள்ளார். இதில், வாங்கிய மூன்றே நாளில் கார் தீ பற்றி எரிந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

Related posts

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.54,160க்கு விற்பனை!!

புழல் சிறையில் காவலர்களிடம் தகராறு: 8 கைது மீது வழக்கு

சென்னையில் இருந்து இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றிச் சென்ற கப்பலை தங்கள் நாட்டு துறைமுகத்தில் நிறுத்த ஸ்பெயின் அனுமதி மறுப்பு