நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.453.67 கோடியில் 9 மாவட்டங்களில் 4272 அடுக்குமாடி குடியிருப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 9 மாவட்டங்களில் ரூ.453.67 கோடியில் 4272 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். அனைவருக்கும் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு மாவட்டம், முருகமங்கலம் திட்டப்பகுதியில் தரை மற்றும் 2 தளங்களுடனும், தரை மற்றும் 5 தளங்களுடனும் ரூ.151.94 கோடி செலவில் 1260 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், செம்மஞ்சேரி திட்டப்பகுதியில் தரை மற்றும் 5 தளங்களுடன் ரூ.20.63 கோடியில் 144 புதிய அடுக்குமாடி குடியிருப்பு என மொத்தம் 453 கோடியே 67 லட்சம் ரூபாய் செலவில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள 4,272 குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து நேற்று திறந்து வைத்தார்.

மேலும் பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 6 பயனாளிகளுக்கு ஆணைகளையும் வழங்கினார். பயனாளிகள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பல்வேறு மாவட்டங்களில் வசிக்கும் 4680 பயனாளிகளுக்கு தனி வீடுகள் கட்ட தலா ரூ.2.10 லட்சம் வீதம் ரூ.98.28 கோடி மதிப்பீட்டிலான பணி ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 3 பயனாளிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைகள் வழங்கினார். 72 நகர்ப்புற கைத்தறி நெசவாளர்களுக்கு தலா ரூ.4 லட்சம் வீதம் ரூ.2.88 கோடி மதிப்பீட்டிலான பணி ஆணைகள் வழங்கிடும் அடையாளமாக 3 பயனாளிகளுக்கு பணி ஆணைகளை வழங்கினார்.

100 மாற்றுத்திறனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர் சி.சமயமூர்த்தி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் பொ.சங்கர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு

மேகதாது பிரச்சனையில் தமிழ்நாடும், கர்நாடகமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்