ஆவடி தொகுதியில் ரூ.3.9 கோடியில் நகர்ப்புற சுகாதார நிலையங்கள்: எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்

ஆவடி: ஆவடி தொகுதியில் ரூ.3.9 கோடியில் நகர்ப்புற சுகாதார நிலையங்கள் அமைக்கும் பணிகளை சா.மு.நாசர் எம்எல்ஏ அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். ஆவடி சட்டமன்ற தொகுதிகளில் மேம்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மண்டல வாரியாக 8 இடங்களில் ரூ.3.9 கோடி மதிப்பீட்டில் 6 நகர்ப்புற சுகாதார துணை நிலையங்கள் மற்றும் 3 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான தொடக்க விழா நடைபெற்றது.

அந்த வகையில் ஆவடி விளிஞ்சியம்பாக்கம் நந்தவனமேட்டூர், பட்டாபிராம் காந்தி நகர், திருமுல்லைவாயல் சரஸ்வதி நகர், சோழம்பேடு, சின்னம்மன் கோயில் தெரு, பருத்திப்பட்டு இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் ஆரம்ப சுகாதார துணை நிலையங்கள் மற்றும் ஆவடி அடுத்த கோவில்பதாகை, பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கும் பணிகளை ஆவடி எம்எல்ஏ சா.மு.நாசர் கலந்து கொண்டு பூமி பூஜையிட்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

மேலும் கட்டிட பணிகளை துரிதமாக செய்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட அவர், பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஆவடி மாநகர ஆணையர் ஷேக் அப்துல் ரகுமான், மேயர் உதயகுமார், பகுதிச் செயலாளர்கள் பேபி சேகர், பொன் விஜயன், நாராயண பிரசாத், ராஜேந்திரன், மாநகரச் செயலாளர் சன் பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் அலை சீற்றத்துடன் காணப்படும்: வானிலை மையம் எச்சரிக்கை

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு