ஐக்கிய அரபு நாடுகளில் கனமழை 10 விமான சேவை ரத்து பயணிகள் அவதி

சென்னை: ஐக்கிய அரபு நாடுகளான துபாய், சார்ஜா போன்ற நாடுகளில், நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் நேற்று முன்தினம் இரவு துபாயில் இருந்து சென்னை வந்து, மீண்டும் துபாய் செல்ல வேண்டிய எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் மற்றும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதேபோல் நேற்று அதிகாலை துபாயில் இருந்து, சென்னைக்கு வரவேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ், துபாயில் இருந்து சென்னை வந்து, அதிகாலை துபாய் புறப்பட்டு செல்ல வேண்டிய பிளை துபாய் ஏர்லைன்ஸ் விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து குவைத் சென்று, நேற்றுஅதிகாலை சென்னை வர வேண்டிய ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சார்ஜாவில் இருந்து நேற்று அதிகாலை 3.30 மணிக்கு சென்னை வர வேண்டிய ஏர் அரேபியன் ஏர்லைன்ஸ், அதிகாலை 4.30 மணிக்கு சென்னையில் இருந்து சார்ஜா செல்ல வேண்டிய ஏர் அரேபியன் ஏர்லைன்ஸ் என மொத்தம் 10 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிப்பட்டனர்.

Related posts

மலர் கண்காட்சியில் 4 நாளில் ரூ.13 லட்சம் வசூல் கொடைக்கானலில் கனமழை படகுப்போட்டி ஒத்திவைப்பு

கஞ்சா, பணம் எப்படி வந்தது? யூடியூபர் சங்கர் திடுக் வாக்குமூலம்

பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலை குற்றவாளிகள் கேரளா ஓட்டமா?