கார்ப்பரேட்களுக்கு சலுகை வழங்கும் ஒன்றிய அரசு விவசாயிகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவில்லை: அய்யாக்கண்ணு குற்றச்சாட்டு

சென்னை:சென்னை, தலைமைச் செயலகத்தில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாய பிரதிநிதிகள் நேற்று சந்தித்து பேசினர். அப்போது, மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்பட்டு வரும் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்க கூடாது என மனு வழங்கினர்.

பின்னர் அய்யாக்கண்ணு பேட்டி அளிக்கையில்,‘‘ ஒன்றிய அரசு விவசாயிகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே சலுகைகளை வழங்கி வருகிறது” என்று தெரிவித்தார்.

Related posts

ஆந்திராவில் தவிடு மூட்டைகளுக்கு மத்தியில் பெட்டி பெட்டியாக வைத்து கடத்தப்பட்ட ரூ.7 கோடி பறிமுதல்..!!

இந்திய அளவில் தொடர்ந்து உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது: மா.சுப்பிரமணியன் பெருமிதம்

மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்குகிறார் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் : டெல்லியில் நடைபெறும் வாகன பேரணியில் பங்கேற்கிறார்!!