நன்றி இல்லாதவர் எடப்பாடி என சாபமிட்டவர் கூட்டணி முறிவு உறுதி இல்லையாம்: எச்.ராஜா திடீர் பல்டி

மொடக்குறிச்சி: நன்றி இல்லாதவர் எடப்பாடி என சாபமிட்ட எச்.ராஜா, நேற்று அளித்த பேட்டியில் அதிமுக-பாஜ கூட்டணி முறிவு உறுதியானது அல்ல என்று திடீர் பல்டி அடித்துள்ளார். ஈரோட்டில் பாஜ மூத்த தலைவர் எச்.ராஜா நேற்று அளித்த பேட்டி: அதிமுக-பாஜ கூட்டணி முறிவு உறுதியானது அல்ல. பாஜ ஒரு தேசிய கட்சி. பிராந்திய கட்சி அல்ல. அதனால் தேசிய தலைமைதான் இதுபற்றி அறிவிக்கும். அன்று கூட்டணி முறிவு குறித்து அறிவித்த அதிமுகவும் இன்று திருப்பி பேசவில்லை என்ற உண்மையை நான் சொல்கிறேன். அது ஏன்? எதனால்? உள்நோக்கம் என்ன? அதற்குள் போக நான் தயாரில்லை. அதனால் எங்கள் தலைமை இதுபற்றி அறிவிக்கும் வரைக்கும் பொறுமை காப்போம். தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை அதிகரிப்பது புகாரின் அடிப்படையில்தான். விசாரணை முடிவில் நீதிமன்றத்தின் மூலம் அமலாக்கத்துறைக்கு பாதகமாக தீர்ப்பு வந்தால், அமலாக்கத்துறையின் மீது நடவடிக்கை எடுக்கும் உரிமை இந்திய தண்டனைச் சட்டத்திற்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

தொடர் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 35 விமானங்களின் சேவை பாதிப்பு: பயணிகள் தவிப்பு

ஜூன் 7: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

சில்லிபாயிண்ட்….