யுனெஸ்கோவின் ‘மைக்கேல் பட்டீஸ்’ விருதுக்கு தேர்வு; மாவட்ட வன அலுவலர் பகான் ஜெகதீஷ் சுதாகருக்கு ஜி.கே.வாசன் பாராட்டு

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: உயிர்க்கோள காப்பகத்தின் காப்பாளராக, பகான் ஜெகதீஷ் சுதாகர் ஐ.எப்.எஸ். அதிகாரியாக வனத்துறையில் திறம்பட பணியாற்றுபவர். குறிப்பாக, மன்னார் வளைகுடா பகுதியின் இயற்கை வளத்தைப் பாதுகாக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் அவரை உலக அளவில் புகழ் பெற வைத்திருக்கிறது.மேலும், மன்னார் வளைகுடாவை பல்லுயிர் பாதுகாப்பு வளையமாக முன்னெடுப்பதில் அளப்பரிய பங்காற்றிய அவரது ஆராய்ச்சியால் இந்த விருதுக்கு தேர்வாகியுள்ளார்.

அதேபோல, யுனெஸ்கோவின் மைக்கேல் பட்டீஸ் விருது இந்தியாவிற்கு முதன்முறையாக அதுவும் தமிழ்நாட்டிற்கு கிடைத்திருப்பது தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்கிறது. இந்திய வன அதிகாரியான பகான் ஜெகதீஷ் சுதாகர், பாதுகாப்பு துறையில் பாராட்டத்தக்க பங்களிப்பை செய்துள்ளார்.

Related posts

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேரோட்டம் தொடங்கியது

கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் பெண்ணை வெட்டிக் கொன்று 3 சவரன் நகை கொள்ளை

மேகாலயாவில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவு