உக்ரைன் மீது ரஷ்யா பயங்கர தாக்குதல்

கீவ்: உக்ரைனின் பல பகுதிகளில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதல்களில் 3 பேர் உயிரிழந்தனர். ஒரு கர்ப்பிணி பெண் உள்பட 13 பேர் காயமடைந்தனர். உக்ரைன் – ரஷ்யா போர் தொடங்கி வரும் 24ம் தேதியுடன் 2 ஆண்டுகள் நிறைவடைய உள்ளன. ஆனால் போர் முடிவுக்கு வரவில்லை. இந்த போரில் உக்ரைனின் அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பது தொடர் கதையாகி வருகிறது.

போரின் தொடக்கத்தில் அடி வாங்கிய உக்ரைன் தற்போது ரஷ்யாவுக்கு தொடர்ந்து பதிலடி கொடுத்து வருவதால் உக்ரைன் ராணுவ வீரர்கள் பலர் உயிரிழந்து விட்டனர். மேலும் உக்ரைன் ராணுவத்துக்கு வெடிமருந்து பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளதால் மேற்கத்திய நாடுகளின் உதவியை உக்ரைன் ராணுவம் எதிர்நோக்கி உள்ளது. இந்நிலையில் நேற்று உக்ரைனின் பல பகுதிகள் மீது ரஷ்யா கப்பல் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை, ஆளில்லா விமானங்கள் மூலம் பெரும் தாக்குதலை நடத்தி உள்ளது. தலைநகர் கீவ் மீது நடத்தப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலில் பொதுமக்கள் 2 பேர் கொல்லப்பட்டனர்.

தெற்கு உக்ரைனின் மைகோலாய் நகர் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 20 கட்டிடங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவை இடிந்து சேதமடைந்தன. இதில் ஒருவர் உயிரிழந்தார். வடகிழக்கு உக்ரைனின் கார்கிவ் நகரில் ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 13 பேர் படுகாயமடைந்தனர்.

Related posts

அண்ணாமலை பேச்சு… வீணாப்போச்சு… தலையில் அடித்துக்கொண்ட கட்சியினர்

நவீன் பட்நாயக் தோல்வி ஒடிசாவில் ஆட்சியை பிடித்தது பாஜ

கோவையில் சுடச்சுட மட்டன் பிரியாணி விநியோகம்: ‘ஆடு கசாப்பு கடைக்குதானே போகும்…’ சமூக வலைதளங்களில் டிரெண்டிங்