ட்வீட் கார்னர்… சபலென்கா நம்பர் 1

யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் அமெரிக்காவின் கோகோவிடம் தோல்வியைத் தழுவினாலும், பெலாரஸ் நட்சத்திரம் அரினா சபலென்கா தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறி அசத்தியுள்ளார். அவர் 9266 புள்ளிகளுடன் முதல் முறையாக நம்பர் 1 அந்தஸ்தை வசப்படுத்தி உள்ளார். போலந்தின் இகா ஸ்வியாடெக் (8195), கோகோ காஃப் (6165), எலனா ரைபாகினா (5790, கஜகஸ்தான்), ஜெஸ்ஸிகா பெகுலா (5755, அமெரிக்கா) ஆகியோர் டாப் 5ல் உள்ளனர். ‘நம்பர் 1’ கோப்பையுடன் சபலென்கா உற்சாகமாக போஸ் கொடுக்கும் படத்தை, டபுள்யு.டி.ஏ தனது அதிகாரப்பூர்வ X வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.

Related posts

எந்த தொகுதி எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்யப்போகிறார் என்று இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு

செம்மஞ்சேரியில் விளையாட்டு நகரம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தயார் செய்ய டெண்டர்

போக்சோ வழக்கில் இன்று விசாரணைக்கு ஆஜராகிறார் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா