டிடிவி.தினகரன் அறிக்கை மருத்துவர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்

சென்னை: அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:மருத்துவப் பணியில் சேர்ந்த 14 ஆண்டுகளில் ஒன்றிய அரசு மருத்துவர்களைவிட மாநில அரசு மருத்துவர்கள் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை குறைவான ஊதியம் பெறுவதாக அரசு மருத்துவர்களுக்கான போராட்டக் குழுவினர் கூறுகின்றனர். கொரோனா பரவல் காலத்தில் பொது சுகாதாரத்துறையின் தேவை மற்றும் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அரசுக்கு உறுதுணையாக இருந்து பாடுபட்ட அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளான ஒன்றிய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்குதல் உள்ளிட்டவற்றை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும் என தமிழ்நாடு முதல்வரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்