திருச்சி அருகே அளவுக்கு அதிகமாக மது குடித்த 2 பேர் உயிரிழப்பு?

லால்குடி: திருச்சி மாவட்டம், லால்குடி அருகே தச்சங்குறிச்சியை சேர்ந்தவர் முனியாண்டி (60). கொத்தனார். அதே பகுதியை ‌சேர்ந்தவர் சிவக்குமார் (48). நண்பர்களான இருவரும், நேற்றுமுன்தினம் மதியம் தச்சங்குறிச்சி டாஸ்மாக் கடையில் மது குடித்துள்ளனர். மாலையில் முனியாண்டிக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. லால்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு நேற்று சென்ற போது முனியாண்டி உயிரிழந்தார். சிவக்குமார் போதையில் வீட்டில் தூங்கியுள்ளார். நேற்று காலை மீண்டும் மது குடித்து விட்டு படுத்தவரை எழுப்பியபோது உயிரிழந்தது தெரியவந்தது. எஸ்பி சுஜித்குமார் சென்று விசாரணை நடத்தினார்.

Related posts

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள், போலீசார் சோதனை

பிரிட்ஜில் மாட்டிறைச்சி வைத்திருந்த 11 பேரின் வீடுகள் இடிப்பு: 150 பசுக்கள் மீட்பு; ம.பி போலீஸ் நடவடிக்கை

காரில் கடத்திய ₹2 கோடி தங்கம் 1 கிலோ வெள்ளி நகை பறிமுதல்