போக்குவரத்து கழகங்களில் காலி பணியிடத்தை நிரந்தரமாக நிரப்ப நடவடிக்கை வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை: போக்குவரத்துக் கழகங்களில் காலிப் பணியிடங்களை முறையாக, நிரந்தரமாக நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வேலையில்லா திண்டாட்டம் குறித்து ஒன்றிய அரசை குறை கூறுவதற்கு முன்னர், தமிழ்நாட்டில் காலியாக உள்ள லட்சக்கணக்கான அரசுப் பணியிடங்களை, அரசுப் போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள ஆயிரக்கணக்கான பணியிடங்களை இளைஞர்களை கொண்டு நிரந்தரமாக நிரப்பி, வேலையில்லா திண்டாட்டத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 25,000க்கும் மேற்பட்ட பணியிடங்களை இளைஞர்களை கொண்டு, நேர்மையான முறையில், வெளிப்படை தன்மையுடன் நிரந்தரமாக நிரப்பிட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஓபிஎஸ் கூறியுள்ளார்.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்