கன்னியாகுமரிக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகையை ஒட்டி நாளை போக்குவரத்து மாற்றம்!

கன்னியாகுமரி: கன்னியாகுமரிக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகையை ஒட்டி நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையம் வரும் பிரதமர், அங்கிருந்து கன்னியாகுமரி வருகிறார். விமான நிலையத்தில் அண்ணாமலை, எல்.முருகன் உள்ளிட்டோர் பிரதமரை வரவேற்கின்றனர். விமான நிலையத்தில் இருந்து கன்னியாகுமரி வரும் பிரதமர் அரசு விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார். அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து சாலை மார்க்கமாக பொதுக்கூட்ட மைதானத்திற்கு செல்கிறார்.

காலை 11.15 முதல் 12.15 வரை விவேகானந்தர் கல்லூரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்த பொதுக்கூட்டம் முடிவடைந்து, பகல் 12.15க்கு அவர் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார். மீண்டும் 6வது முறையாக வருகிற 18ம் தேதி தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி, கோவையில் நடக்கும் கூட்டத்தில் பேசுகிறார். 19ம் தேதி சேலம் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். 22ம் தேதி மதுரைக்கும் வர உள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடி நாளை கன்னியாகுமரி வருவதை தொடர்ந்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

பொதுக்கூட்டம் நடைபெறும், அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானம் போலீஸ் கட்டுப்பாட்டு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, கன்னியாகுமரிக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகையை ஒட்டி நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை கன்னியாகுமரியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். நாளை காலை 6 மணி முதல் பொதுக்கூட்டம் முடியும் வரை குமரி ரவுண்டானாவில் இருந்து மகாதானபுரம் ரவுண்டானா வரை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொதுக்கூட்டத்துக்கு வருகை தரும் வாகனங்கள் சரவணந்தேரி வரை அனுமதிக்கப்படுவார்கள் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரி ரவுண்டானாவில் இருந்து புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி வரை வாகனம், பாதசாரிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு பேருந்துகள் அனைத்தும் குமரி ரயில் நிலையத்துக்கு முன்பு நிறுத்தி இயக்கப்படும் என்று மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

 

Related posts

மோடியின் வெறுப்பு பேச்சுக்களால் பிரதமர் பதவிக்கே இழுக்கு: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடும் தாக்கு

140 இடங்களில் பாஜ வெற்றி பெறுவதே கடினம்: அகிலேஷ் பிரசாரம்

தேர்தல் பிரசாரத்தின்போது 421 முறை மோடி பிரிவினைவாத பேச்சு: கார்கே விமர்சனம்