டொயோட்டா வெல்பயர்

டொயோட்டா நிறுவனம், புதிய தலைமுறைக்கான டொயோட்டா வெல்பையர் காரை அறிமுகம் செய்துள்ளது. இதில், எச்ஐ மற்றும் விஐபி என 2 வேரியண்ட்கள் உள்ளன. இந்த எம்பிவியில் 2.5 லிட்டர் 4 சிலிண்டர் கொண்ட பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இ-சிவிடி யூனிட்டுடன் ஹைபிரிட் காராக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 193 எச்பி பவரையும், 240 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். அதிகபட்சமாக ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 19.28 கிமீ மைலேஜ் வழங்கும் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

டொயோட்டாவின் மாடுலர் டிஎன்ஜிஏ-கேயை அடிப்படையாகக் கொண்டு பிளாட்பார்மில் உருவாகியுள்ள இந்த கார், இதற்கு முந்தைய மாடலை விட சற்று சிறிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 14 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம், பெரிய ஓவர்ஹெட் கன்சோல். அடாஸ் தொழில்நுட்பம், குரூஸ் கன்ட்ரோல் உட்பட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. ஷோரூம் விலையாக எச்ஐ மாடல் சுமார் ரூ.1.2 கோடி எனவும், விஐபி சுமார் ரூ.1.3 கோடி எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related posts

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு

மேகதாது பிரச்சனையில் தமிழ்நாடும், கர்நாடகமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்