ரம்ஜான் விடுமுறை, கொளுத்தும் வெயில் எதிரொலி: ‘இளவரசி பூமியில்’ இளைப்பாற சுற்றுலாப்பயணிகள் படையெடுப்பு


கொடைக்கானல்: ரம்ஜான் விடுமுறை, கொளுத்தும் வெயில் காரணமாக கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கொடைக்கானலில் ஆண்டின் அநேக மாதங்களும் சுற்றுலாப்பயணிகளின் வருகை இருக்கும். குறிப்பாக கோடை சீசன், வார விடுமுறை, தொடர் விடுமுறை காலத்தில் தினமும் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகளவில் இருக்கும். தற்போது கோடைக்காலம் துவங்கியுள்ள நிலையில் சமவெளி பகுதியில் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையும் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் நேற்று ரம்ஜான் மற்றும் தொடர்ந்து வார விடுமுறை வரவுள்ளது. மேலும், வெயில் கொளுத்தி எடுப்பதாலும் நேற்று கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகள் குடும்பத்துடன் குவிந்தனர். இவர்கள் முக்கிய சுற்றுலா இடங்களான தூண் பாறை, குணா குகை, பசுமை பள்ளத்தாக்கு, பைன் பாரஸ்ட், பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட பகுதிகளை கண்டு ரசித்தனர். மேலும் ஏரியில் படகு சவாரி, ஏரி சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் ரைடிங் சென்றும் மகிழ்ந்தனர். வரும் நாட்களில் சுற்றுலாப்பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

வெயிலின் தாக்கத்தால் மின்சார தேவை அதிகரித்துள்ள நிலையில் டான்ஜெட்கோ தலைவர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

நோயாளிகளுக்கு ஒரே ஊசி பயன்படுத்திய விவகாரம் : இணை இயக்குனர் விசாரணை!!

40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்.. வாக்கு எண்ணிக்கையின்போது விழிப்புடன் இருப்போம்: ஆர்.எஸ்.பாரதி பேட்டி!!