சுற்றுலா அலுவலர் பதவிக்கான தேர்வு ஹால்டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி தகவல்

சென்னை: சுற்றுலா அலுவலர் பதவிக்கான தேர்வு ஹால்டிக்கெட் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு பொதுப்பணியில் அடங்கிய சுற்றுலா அலுவலர் பதவிக்கான எழுத்து தேர்வு(விரிந்துரைக்கும் வகை தேர்வு) வருகிற 10ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகல், 11ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகலில் சென்னை மாவட்ட தேர்வு மையத்தில் மட்டும் நடைபெற உள்ளது. தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள் (ஹால்டிக்கெட்) தேர்வாணையத்தின் இணைய தளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.inல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்ய முடியும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் 24 மணி நேரமும் மின்சாரம்: கெஜ்ரிவால் வாக்குறுதி

குற்றவாளிகளை பாதுகாக்கும் திரிணாமுல்; சந்தேஷ்காலி பெண்களை அச்சுறுத்தும் குண்டர்கள்: பிரதமர் மோடி பிரசாரம்

10 ஆண்டாக கிடைத்த பணத்தை எண்ணும் பாஜ : ராகுல் காந்தி ட்விட்