கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பம் செய்ய இன்றே கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-24ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு கடந்த 8ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை பல லட்சம் மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிப்பதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது. கலை மற்றும் அறிவியல் படிப்பு படிக்க விரும்பும் மாணவ-மாணவிகள் www.tngasa.in என்ற இணையதளங்களில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒவ்வொரு கல்லூரிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க, விண்ணப்பக்கட்டணம் செலுத்த அறிவுறுத்தப்பட்டனர்.

ஆனால், இந்த ஆண்டு 5 கல்லூரிகளுக்கு ஒரே தடவை விண்ணப்பக்கட்டணத்தை செலுத்தினால்போதும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக விண்ணப்பப்பதிவு செய்வதற்கான கடைசி நாள் மே 19ம் தேதி என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை மேலும் 3 நாட்கள் நீட்டித்துள்ளதாக உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். அதன்படி, இன்றே
விண்ணப்பப் பதிவு செய்வதற்கான கடைசி நாள் ஆகும். விண்ணப்பப்பதிவு தொடங்கிய முதல் நாளில் 18 ஆயிரத்து 322 பேர் விண்ணப்பம் செய்து இருந்தனர். நேற்றைய நிலவரப்படி, 2,90,973 பேர் விண்ணப்ப பதிவு செய்துள்ளனர். அவர்களில் 2,36,677 பேர் விண்ணப்பக்கட்டணம் செலுத்தியுள்ளனர் என கல்லூரிக்கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. அவர்களில் 1,12,022 மாணவர்கள், 1,24,580 மாணவிகள், 75 மூன்றாம் பாலினத்தவர். அரசுப்பள்ளிகளில் படித்து விண்ணப்பித்த மாணவிகள் 53,726 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

டெல்டா மாவட்டங்களில் கனமழை; புதுகையில் அறுவடைக்கு தயாரான 100 ஏக்கர் நெற்பயிர் சாய்ந்தது: தண்ணீரை வடிய வைக்கும் பணி தீவிரம்

தமிழ்நாட்டில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

விராலிமலையில் பட்டாசு கிடங்கில் நடந்த வெடிவிபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்