புகையிலை பதுக்கியவர் விசாரணைக்கு பயந்து தற்கொலை

களக்காடு: நெல்லை மாவட்டம், களக்காடு அருகேயுள்ள வடக்கு கள்ளிகுளம், வடக்குத்தெருவை சேர்ந்தவர் சைலப்பன் (56). இவரது மனைவி முத்துமாரி. தம்பதிக்கு 3 வயதில் ஒரு மகனும், 2 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
கூலி தொழிலாளியான சைலப்பன், புகையிலைப் பொருட்களை பதுக்கிவைத்து விற்பனை செய்ததால், போலீசார் நேற்று முன்தினம் அவரது வீட்டில் சோதனை நடத்தி 285 கிராம் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து விசாரக்கு வருமாறு கூறியுள்ளனர். இந்நிலையில், போலீஸ் விசாரணைக்கு பயந்தும் வீட்டிலேயே விஷம் குடித்து மயங்கினார். மருத்துவமனையில் சேர்க்கப் பட்ட அவர், நேற்று மாலை உயிரிழந்தார்.

 

Related posts

ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா!

சென்னையில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு!!

ஜூன்- 01: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை!.