டிஎன்பிஎஸ்சி குரூப்4 பணியிடங்களை உயர்த்த வைகோ வேண்டுகோள்

சென்னை: டிஎன்பிஎஸ்சி குருப் 4 காலிப் பணியிடங்களை உயர்த்த வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளார் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கொரோனாவால் 2019ம் ஆண்டுக்குப் பிறகு நடத்த முடியவில்லை. இந்நிலையில்,3 ஆண்டுகள் கழித்து, 2022ம் ஆண்டு ஜூலை 24ம் தேதி இதற்கான தேர்வுகள் நடத்தப்பட்டு, கடந்த மார்ச் 24ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

இதற்கான காலிப் பணி இடங்கள் 10,117 என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது. 3 ஆண்டுகள் தேர்வுகள் நடத்தப்படாத நிலையை கவனத்தில் கொண்டு, பறிபோன 30,000 பேருக்கான வேலைவாய்ப்புகளையும் இணைத்து, அவைகளுக்கான தேர்வையும், கலந்தாய்வையும் இந்த ஆண்டிலேயே நடத்தி அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

சனிக்கிழமை அட்டவணைப்படி நாளை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுகவை தொடர்ந்து தேமுதிகவும் புறக்கணிப்பதாக அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தேமுதிக புறக்கணிப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவிப்பு